சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஸ்ரீ ஜெய துர்க்கா ஆலயம் உதவிகளை வழங்கியுள்ளது

கடந்த 03.12.2015 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 14.12.2015 அன்று வாழைச்சேனை குகனேசன் கலாச்சார மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொரளைப்பற்றில் 9 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகி வாழைச்சேனை துறைமுகத்தில் நிறைவடைந்தது. அதன் பின்னர் குகனேசன் கலாச்சார மண்டபத்தில் ஸ்ரீ ஜெய துர்க்கா ஆலயத்தின்உதவியோடு நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கான நிறைகுடம் மற்றும் குத்துவிளக்கு போன்ற பொருட்களும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ ஜெய துர்க்கா ஆலயம்
Comments (0)
Add Comment