சவேந்திர சில்வா நியமனம்: அமெரிக்கா கடும் அதிருப்தி

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நியமனம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தலைமையிலான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புக்களினாலும் அவனப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.

குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமாக காணப்படும் இந்த தருணத்தில் இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்குமான அதன் உறுதிப்பாட்டினையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.


அதிருப்தி
Comments (0)
Add Comment