சாதனைக்காக மிளகாய் சோசில் குளித்த இளைஞர்!

சாதனை செய்ய வேண்டும் என நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வித்தியாசமான முறையில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் கெம்ரி கேன்டர். ஏதாவது செய்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்வது இவரது பொழுது போக்கு ஆகும்.

காரமான சாஸில் குளித்தது தான் இவர் செய்த சாதனை, இப்படி ஒரு வித்தியாசமான சாதனையை செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல, ஏனெனில் இதற்கு முன்னர் உருகிய சாக்லெட் மற்ரும் தொட்டி முழுவதும் நிரப்பபட்ட பீர் போன்ரவற்ரில் நீச்சலடித்த இவர், தற்போது இந்த சாஸ் குளியலை மேற்கொண்டு உள்ளார்.

பல்வேறு வாளிகளில் நிரப்பட்டுள்ள காரமான சாஸ்களை, குளிக்கும் தொட்டியில் நிரப்புகிறார். அதன் பின்னர் அந்த தொட்டிக்குள் உருண்டு புரளும் இவர், எரிச்சல் தாங்க முடியாமல் கத்துகிறார், மேலும் முகத்தினையும் சாஸ்க்குள் முக்கி எடுத்ததில், அவரது வாயுக்குள்ளும் சாஸ் சென்றுவிடுகிறது.

இந்த சாதனையை செய்வதற்கு இவருக்கு 1,250 பாட்டில் சாஸ்கள் தேவைப்பட்டுள்ளது, இதனால் சாஸ் மற்றும் அதற்கான பணம் வீணாகிவிட்டதே என கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அந்த சோஸ்கள் அனைத்தும் கலாவதியான சாஸ்கள் ஆகும்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இந்த வீடியோவை 2.4 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர்.

காரம்சாக்லேட்சாதனைசோஸ்பேஸ்புக்மிளகாய்வாளிகள்வீடியோ
Comments (0)
Add Comment