சாமானிய மக்கள் எப்படி ஜெயை தொடர்பு கொள்ள முடியும் – அன்புமணி

மத்திய அமைச்சரே தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை; தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் சாமானிய மக்கள் எப்படி ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியும் என்று பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வினா எழுப்பியுள்ளார்.  

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு உங்கள் ஊர் உங்கள் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தினர் கேள்விகளுக்கு அன்புமணி பதில் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பொய்யான குற்றசாட்டை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரே தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை; தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் சாமானிய மக்கள் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் வினா எழுப்பினார்.

மேலும் யாரும் சந்திக்க முடியாத நிலையில் தமிழக முதல்வர் உள்ளார் என்றும், மத்திய அமைச்சரின் புகார் தமிழகத்திற்கு அவமானமாகவும், கேவலமாகவும் உள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தார்.

அன்புமணிசாமானியமக்கள்ஜெயலலிதாதமிழகம்பாமகமத்திய அமைச்சர்முதலமைச்சர்முதல்வர்ராமதாஸ்வேட்டபாளர்
Comments (0)
Add Comment