சார்ள்ஸ் நிர்மலநாதனை காய்வெட்ட திட்டமிட்டுள்ள சிவமோகன்…

கூட்டமைப்பினில் தற்போதுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே இடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் சிவமோகன்,சார்ள்ஸ் நிர்மலநாதனை காய்வெட்ட திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வகையில் சிவமோகனிற்கு பதிலாக து.ரவிகரனும் சார்ள்ஸிற்கு பதிலாக வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதரையும் களமிறக்க சுமந்திரன் சிபார்சு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே அவ்வாறு வெளியேற்றப்பட்டால் வன்னியில் புதிய தேர்தல் களமொன்றை திறக்கவுள்ளதாக சார்ள்ஸ் தனது மாதாந்த ஊதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளராம்.

யாழ்.தேர்தல் களத்தில் கூட்டமைப்பின் பட்டியலில் மாற்றமில்லாத போதும் கிளிநொச்சியில் தனது இருப்பினை தக்க வைக்க முன்னாள் முதலமைச்சருடன் பின்கதவு பேரமொன்றில் களமிறங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.

சார்ள்ஸ் நிர்மலநாதன்சிவமோகன்நகர்த்தல்பேரம்
Comments (0)
Add Comment