சாலிகிராமத்தில் அதிமுகவினருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார் தமிழிசை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இன்று மதியம் 12 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மேளதாளம் முழங்க, சாலிகிராமத்தில் உள்ள மண்டலக அலுவலகத்துக்கு இன்று காலை வந்த தமிழிசை சௌந்தரராஜன், அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவாகரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை வழங்கிய பிறகு, தேர்தல் உறுதிமொழியையும் அவர் எடுத்துக் கொண்டார்.

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று மதியம் 12 மணியளவில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தது போல, அவர்களுடன், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசையும் அதே நேரத்தில் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகசாலிகிராமம்தமிழிசைபாஜகவேட்பு மனு தாக்கல்
Comments (0)
Add Comment