சிகிச்சை பெறும் பேரறிவாளன்: தாயார் அற்புதம்மாள் மகனை சந்திக்க அனுமதி மறுப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனுக்கு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பேரறிவாளனை சந்திக்க அனுமதி கோரிய அவரது தாயார் அற்புதம்மாளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சீறுநீர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று சிகிச்சைக்காக வந்த பேரறிவாளனை பரிசோதித்த, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்கும்படி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, இன்று காலை 10 மணி அளவில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அவரை உள்நோயாளியாக அனுமதிக்காமல், புறநோயாளியாக வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் மீண்டும் புழல் சிறைக்கு, அழைத்துச் செல்லப்பட்டார்.  இதற்கிடையே, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், மகனை சந்திக்க காவல்துறையினரிடம் அனுமதி கோரினார். ஆனால், அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீர் தொற்று நோய் பிரச்சினை காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என மாறி மாறி சென்று புறநோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

 மேலும் சிகிச்சைக்காக நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவர்களிடம் தன்னை உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும். நோயால் அவதிப்படுகிறேன் என்று பேரறிவாளன் கேட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து 3 நாட்கள் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர மருத்துவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்தனர்.

அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு 4 மாடிக்கு அழைத்து செல்லப்பட்டு சிறிய பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது புறநோயாளியாக வைக்கப்பட்டுள்ளார். ஆனால் உள்நோயாளியாக இதுவரை அனுமதிக்கப்படவில்லை. காவல் துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அரசு மருத்துவமனைஅற்புதம்மாள்உள்நோயாளிசிகிச்சைபடுகொலைபுழல் சிறைபேரறிவாளன்வழக்கு
Comments (0)
Add Comment