சித்தராமையாவின் சூழ்ச்சிக்கு ஜெயலலிதா உடன்படக் கூடாது: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சூழ்ச்சிக்கு, தமிழக முதல்வர் உடன்படக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநில முதல்வர்களை பிரதமர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இது தமிழகத்துக்கு விரிக்கப்பட்டச் சூழ்ச்சி வலையாகும். இதை தமிழக முதல்வர் ஏற்க மறுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது ஒன்றே பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டிய கடமையாகும். அதனை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

காவிரிகாவிரி மேலாண்மை வாரியம்சித்தராமையாஜெயலலிதாபழ நெடுமாறன்
Comments (0)
Add Comment