சிரியாவில் தீவிரவாத பயிற்சி பெறும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பில் விசாரணை..

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பில்,
சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

அதோடு அவர்கள் அண்மையில் அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றியிருந்தனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன.

அதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த பணம் சிரியாவில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாசெண்பகம்
Comments (0)
Add Comment