இவர்களில் பகீதரன் மற்றும் இலங்கைநாதன் ஆகியோர் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றும் குமரகுரு என்பவர் தொடையுடன் கல இழந்ததுடன் இதய நோய்க்கும் ஆளாகிய நிலையில் பராமரிக்க எவரும் இல்லாது சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பல வருடங்கள் குடும்பங்களில் இருந்து பிரித்து தடுத்து வைக்கப்படுவதால் அகதிகளாய் வாழும் பல குடும்பங்கள் உழைப்பில்லாமல் பெரிதும் கஷ்டப்படுவதொடு ஆண் துணை இல்லாமல் சமூகத்தில் பல துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர்.
தமிழகத்தில் ஈழ ஆதரவு கட்சிகள் பல இருந்தும் சிறப்பு முகாமினை மூடுவதற்கு முடியாமல் இருப்பது மிகவும் வேதனையான விடையமாகும். தற்போது தமிழக தேர்தல் நெருங்கும் வேளையில் இவர்களது பட்டினிப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.