இலங்கையின் மின்சாரத்துறை எதிர்கொண்டுள்ள பல நெருக்கடிகள் குறித்த உண்மையை அரசாங்கம் மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர்கள் நாளொன்றிற்கு ஒரு மணிநேரமாவது மின்தடை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
100 மொகவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அடுத்த வாரம் இந்த மின்சாரத்தை கொள்வனவு செய்தால் கூட அதனை மக்களிற்கு வழங்குவதற்கு சில வாரங்கள் எடுக்கலாம். எனினும் இதற்கு முன்னர் லக்ஸபானா மற்றும் சமனலவேவா ஆகியவற்றின் நீர்மட்டம் குறையும் அபாயமும் காணப்படுகின்றது. இதன் காரணமாக தென்மாகாணங்களிற்கும்.
கொழும்பிற்குமான மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் என மின்சாரசபை பொறியியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்காரணமாக மக்களிற்கு உண்மையை தெரிவித்து நாளாந்தம் ஒரு மணிநேரமாவது மின்சாரத்தை துண்டிப்பதே சிறந்த நடவடிக்கையாகும். இந்த முக்கியமான தருணத்தில் அரசியற்கட்சிகள் தங்கள் குறுகிய நலன்களை கைவிட்டு நாட்டின் நலனிற்காக ஒன்றுபட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.