சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், ஜெனிவா தொடர்பான எந்தவாக்குறுதியையும் வழங்கவில்லை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், ஜெனிவா தொடர்பான எந்தவாக்குறுதியையும் வழங்கவில்லை என்று  இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு  எதிரான தீர்மானம்  முன்வைக்கப்படவுள்ளநிலையில், மியான்மர் தலைநகர் நெபிடோவில்,  இந்தியப்பிரதமர்  மன்மோகன்சிங்,  சிறிலங்கா  அதிபர்  மகிந்த ராஜபக்சவை  சந்தித்து பேசியிருந்தார்.

இந்தச் சந்திப்புக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இந்தநிலையில்,  இந்தச் சந்திப்புக்  குறித்து,  புதுடெல்லியில் செய்தியாளர்களிடம்  கருத்து வெளியிட்ட இந்தியவெளிவிவகார  அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன்,

“ஜெனிவா  தீர்மானம்  தொடர்பாக இந்தியப் பிரதமர்  எந்தவாக்குறுதியையும் சிறிலங்கா  அதிபருக்குகொடுக்கவில்லை.  இந்த தீர்மான வரைவு தொடர்பாக குறிப்பிடத்தக்ககலந்துரையாடல் ஏதும் நடத்தப்படவில்லை என்றுதெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அரசதரப்பு வெளியிட்டுள்ளதகவலன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின்பரந்துரைகளை  நடைமுறைப்படுத்துவது தொடர்பானதேசிய செயற்திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்துஇந்தியப் பிரதமருக்கு சிறிலங்கா  அதிபர் விளக்கிக்கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும்இடையிலான உறவுநிலை தொடர்பாக இந்தியப் பிரதமர்கேள்வி  எழுப்பியதாகவும், அதற்கு, சிறிலங்கா அதிபர்,வடக்கு மாகாணசபையுடன் தமது அரசாங்கம் ஒத்துழைத்துசெயற்படுவதாக  பதிலளித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர்செயலகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு
Comments (0)
Add Comment