சிறிலங்கா கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 500 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பார்த்து எச்சரிக்கை செய்தனர்.

ஏன் எங்கள் பகுதிக்கு வந்து மீன் பிடிக்கிறீர்கள்? பலமுறை சொல்லியும் இங்கு ஏன் வருகிறீர்கள்? என கூறி மிரட்டினர். பின்னர் அவர்கள் மீனவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மீனவர்களின் படகுகளில் புகுந்து அதிலிருந்த மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு, கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை அறுத்து எரிந்தும் நாசம் செய்தனர். இதனால் மீனவர்கள் அவசர அவசரமாக உயிர் தப்பினால் போதும் என்று கருதி இன்று காலையில் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும், கடத்துவதும் வாடிக்கையாகி விட்டது. நாங்கள் பலமுறை போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால் பலன்தான் இல்லை என கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கடற்படைசிறிலங்காதமிழகம்படகுமீனவர்கள்ராமேசுவரம்விரட்டியடிப்பு
Comments (0)
Add Comment