அவன்ட் கார்ட் நிறுவனம் இலங்கைக் கடற்படையினருக்கு 700 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட போது. இலங்கைக் கடற்படையினரிடம் பெற்றுக்கொண்ட சேவைகளுக்காக இவ்வாறு அவன்ட் கார்ட் நிறுவனம் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு இலங்கைக் கடற்படையினர் எவ்வித பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னதாக தீர்மானங்களை எடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.