சிறீ.கடற்படையால் நாகை மீனவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடலுக்கு அருகாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேரை சிறீலங்கா கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

அவர்களின் 5 விசைப்படகுகள் மற்றும் 2 நாட்டுப் படகுகளையும் சிறீலங்கா கடற்படையினர் கைப்பற்றி காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டுவந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 50 பேரையும் இன்று முற்பகல் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 43 மீனவர்கள் இலங்கை சிறையில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களது 55 படகுகளும் சிறீலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிறீலங்கா சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஓகஸ்ட் 2 ஆம் திகதி அனைத்து மீனவர்களும் படகுகளில் வெள்ளை கொடி கட்டி கொண்டு கச்சதீவில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்த போகின்றோம் என்றும் அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நாகை மீனவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

50 பேரைஇரவுகடற்படையினர்கைதுசிறீலங்காசெய்துள்ளனர்திங்கட்கிழமைநேற்றுமீனவர்கள்
Comments (0)
Add Comment