இக்குழுவின் தலைவர் 13 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பார்சிலோனா, பார்சிலோனாவுக்கு தெற்கிலுள்ள டோர்டோசா, வலெந்ஸீய மற்றும் மொரோக்கோ ஆகிய பகுதிகளில் உள்ள சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளும் படங்களை இவர்கள் அதிகம் விநியோகித்துள்ளதாகவும் இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், செக் குடியரசு, கென்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள ஆபாசப் படங்களை கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை உலகளாவிய ரீதியில் விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இக்குழுவினர் பாலியல் துஷ்பிரயோகத்தை இலக்காகக் கொண்டு, இறுதியாக மெக்சிக்கோவுக்கு பயணிக்கவிருந்தமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் பாதுகாப்பு படையினர் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.