சிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் இஸ்லமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
பிரதமராக பதவி வகித்தபோது நவாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினர் பெயரில் லண்டனில் அவென்பீல்டு சொகுசு வீடுகளை ஊழல் செய்த பணத்தில் வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் மகள் மரியத்துக்கும், மருமகன் கேப்டன் சப்தாருக்கும் பெரும் பங்கு உண்டு என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்றம் , கடந்த 6ம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு மொத்தம் 11 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்திருந்தது.
அதேவேளை அவரின் மகள் மரியத்துக்கு 8 வருட சிறைத் தண்டனையும், 2.6 மில்லியன் அபராதமும் விதித்ததோடு, . சப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனைய்ம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பொறுப்புடைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூவரும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது..
இந்த மனுவை இஸ்லமபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
இதேவேளை இது தவிர, பனாமா ஆவண ஊழல் தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடைபெற்று வரும் மற்ற இரு வழக்கு விசாரணைகளையும் வேறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.