சிலி நாட்டில் அரியவகை திமிங்கிலத்தை, கடல்வாழ் உயிரியின அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பன்னாட்டு திமிங்கில வேட்டைக்காரர்களால், தொடர்ந்து திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவதால், திமிங்கிலங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், சிலி நாட்டின், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள், தங்கள் நாட்டின் கடற்பரப்பில் கடந்த பல மாதங்களாக, திமிங்கலங்கள் குறித்த ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்போது படகுக்கு அடியில் வைக்கப்பட்ட கேமிராவில், அரியவகை திமிங்கலத்தின் நடமாட்டத்தை கண்டறிந்துள்ளனர்.
டால்பின் மீன் போன்ற உருவத்தில் காணப்பட்டுள்ளது. இந்த கில்லர்(killer) திமிங்கிலம் குறித்த காட்சிகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், அதற்கு டைப் டி(‘Type D) என தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.