சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் ..

சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டது.

விமானம் புரப்பட்ட அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு அற்றுப் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டுப்பாட்டினை இழந்த குறித்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து
Comments (0)
Add Comment