சிலை கடத்தல் மன்னன் கைதாவது எப்போது?

தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் போலீசார் மீட்டுள்ள சிலைகளில் கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் உள்ளதா? என்று அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

இந்த ஆய்வு பணியில் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள முல்லால் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவிலில் 10 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன சிவகாம சுந்தரி அம்மன் சிலை தீனதயாளன் வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் இருக்கும் அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள திருமுக்தீஸ்வரர் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு திருடப்பட்ட பிரம்மா சிலையும் தீனதயாளன் வீட்டில் இருப்பதை அதிகாரிகள் அடையாளம் காட்டினார்கள்.

சென்னை ஜெயின் கோவில்களில் திருட்டு போன 10 பழங்கால ஓவியங்களும் தீனதயாளன் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. ஜெயின் கோவில் நிர்வாகிகள் அவற்றை அடையாளம் காட்டியதாக சிலை திருட்டு தடுப்பு போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை தொழில் அதிபர் தீனதயாளன் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளை திருடும் கும்பலோடும், தீனதயாளனுக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுபற்றிய முழு விவரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் சேகரித்து வருகிறார்கள்.  முழு விவரங்களையும் சேகரித்த பின்னர் சிலை திருட்டு கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்குவார்கள் என்று தெரிகிறது. சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருடனும், தீனதயாளனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது.

அதிகாரிகள்அறநிலைஆய்வுகடத்தல்கைதுசிலைதீனதயாளன்துறைதொழில் அதிபர்
Comments (0)
Add Comment