சிவகார்த்திகேயன் நடிக்கும் 13-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
இப்படம் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது
படத்தை 50 நாட்களில் படமாக்கி முடிக்க படக்குழு தீர்மானித்துள்ளதாக்வும் தெரியவந்துள்ளது. ‘
நயன்தாரா
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைய உள்ளார்.
எம்.ராஜேஷின் முந்தைய படங்கள்போல காதல் போட்டி, காமெடி, ஆக்சன் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஜினியின் ‘மன்னன்’ பட பாணியில் படம் முழுக்க காமெடி களமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரம் கூறுகின்றது.
‘மன்னன்’ படத்தில் விஜயசாந்தி கதாபாத்திரம் போல, இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.