இவருக்கும் சேரன் குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும் (25) கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திவ்யா படுக்கை அறையில் சுய நினைவில்லாமல் கிடந்தார். அவரை கணவரின் உறவினர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திவ்யாவை அடித்து கொலை செய்து விட்டதாக அவரது அண்ணன் பிரேம் குமார் மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் திவ்யாவின் உறவினர்கள் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் இந்த மறியல் நடைபெற்றது.
இதனால் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழித் தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திவ்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் தரும் அறிக்கை அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் திவ்யாவின் மர்ம சாவு தொடர்பாக அவரது கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துதல், மரணத்துக்கு காரணமாக இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் 3 பேரையும் மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட்டு விஜயன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.