பட்டாசுகளை விற்கும் கடைகள், கிடங்குகளில் இந்த தனிப்படையினர் சோதனை நடத்தி, சீனப்பட்டாசு விற்பனையை தடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனப்பட்டாசு விற்பனை நடந்தால், அது குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை கொண்டு சீனப்பட்டாசுகள் தயாரிக்கப்படுவதால், அவற்றை பயன்படுத்த இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.