ஹம்பாந்தோட்டையில் நேற்று தெற்கு பொருளாதார அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இதனை தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்காவுக்காக சீனாவின் அபிவிருத்தி உதவிகளை எந்த எதிர்மறை சக்திகளாலும் தடுக்க முடியாது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை எவராலும் தடுத்து விடவும் முடியாது.
இது சிறிலங்காவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு 50 க்கும் அதிகமான சீன முதலீட்டாளர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
எல்லாம் நன்றாக நடந்தால் அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர் முதலீடுகள் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம் ஒரு இலட்சம் ஸ்ரீலங்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
சீனாவுக்கு மிகவும் நட்பான நாடு சிறிலங்கா. அதனால் தான் சிறிலங்காவில் முதலீடுகளை மே்றகொள்வதற்கு சீனா முன்னுரிமை கொடுக்கிறது.
2014 இல் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சிறிலங்காவுக்கு விஜயம் செய்த போது, சிறிலங்காவில் எமது முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று 2015 இல் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது என்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இப்போது அடிப்படை கைத்தொழில் முறையை உருவாக்குவதற்கு உதவ சிறிலங்காவுடன் சீனா இணையவுள்ளது.
தெற்கு அபிவிருத்தி வலயம் மிகவும் முக்கியமான பொருளாதார செயற்பாடாக சிறிலங்காவுக்கு அதன் அரசாங்கத்துக்கும் ஹம்பாந்தோட்டை மக்களுக்கும் இருக்கும்.
சிறிலங்கா ஒரு சிறிய நாடல்ல. 20 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெரிய நாடு. மிகப் பெரிய வாய்ப்புகளைக் கொண்ட மிகப் பெரிய நாடு.
சீனாவின் எல்லா திட்டங்களும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும். சிறிலங்கா அரசாங்கத்தினமும் மக்களினதும் முடிவுகளுக்கு மதிப்பளிப்போம் என தெரிவித்தார்.