சீமைக்கருவை மரங்கள் அகற்றல் வழக்கு: வைகோ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் சீமைக் கருவை மரங்களை முற்றிலும் அகற்றுவது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதுதொடர்பாக வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்திலுள்ள சீமைக்கருவை மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றுமாறு, கடந்த 2013-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.

 எனவே தமிழகம் முழுவதும் சீமைக் கருவை மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், குறிப்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில், கருவேல மரங்களை தொழிற்நுட்ப ரீதியாக அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ வாதிடுகையில், நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்களை சீமைக்கருவை மரங்களை அப்புறப்படுத்த பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தார்.

 இதனையடுத்து தமிழகத்தில் சீமைக்கருவை மரங்களை எவ்வாறு முற்றிலும் அகற்றலாம் என வரும் 28 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வைகோவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அகற்றல்அறிக்கை தாக்கல்சீமைக்கருவை மரங்கள்மதுரை உயர்நீதிமன்றம்விசாரணைவைகோ
Comments (0)
Add Comment