சுசந்திகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக வினவிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சுசந்திக்கா ஜெயசிங்கவிற்கு தனது வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யும் அவசியம் ஏற்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
சுசந்திக்கா ஜெயசிங்கவிற்கு 75,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவொன்றுடன் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் பதவியொன்றை வழங்க தான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்த போதிலும், அமைச்சரவை அவருக்கு 60,000 ரூபாய் மாத்திரம் வழங்க தீர்மானித்தாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனை பெற்றுக்கொள்ள சுசந்திக்கா ஜயசிங்க முன்வரவில்லை என்று கூறிய அமைச்சர், அவருக்கு அந்த பதவியில் கடமையாற்ற எந்த தடையும் இல்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கையின் ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.