ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் , 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள் மூவர் மற்றும் 54 தொகுதி அமைப்பாளர்கள் இருப்பதாக சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் பேரில் இயங்கும் அமைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஆதரவளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ரெஜினோல்ட் குரேயின் வீட்டில் இது சம்பந்தமாகப் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடபப்ட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்களை இந்தக் குழுவில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
அதோடு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பணிகளில் இருந்து விலகியிருக்கும் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரி அணியைச் சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் 6 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கி அரசுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.