சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் நோக்கில் வெடிகுண்டு தாக்குதல்

சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புலனாய்வு அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டங்கள் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அனைத்து மாநில அரசுகளும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர், முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவை சீர்குலைக்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறைந்தளவு பார்வையாளர்களுக்கு மட்டுமே இந்த விழாவிற்கு வர அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் டெல்லி முழுவதும் அதிகளவில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானங்களை கடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சிகளை தடுக்கும் நோக்கில், கடலோர காவல்படையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து காஷ்மீர் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த மாநிலஙகளுக்கு கூடுதல் துணை ராணுவப்படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அமைப்புஇருப்பதாகஎச்சரிக்கைசீர்குலைக்கும்சுதந்திரதாக்குதல்திட்டமிட்டுதினவிழாவைதீவிரவாதிகள்நடத்தநோக்கில்புலனாய்வுவிடுத்துள்ளதுவெடிகுண்டு
Comments (0)
Add Comment