முல்லைத்தீவில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்காலிக அனுமதி .வழங்கப்பட்டவுள்ளமைக்கு எதிர்ப்பு தொரிவித்து மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (17) காலை 9 மணியளவில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளதினைக்களத்திற்கு எதிரே அமைதியான போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர் போராட்டத்தில் உள்ள மீனவர்கள் கறுத்த துணியினால் வாயினை கட்டி தமது எதிர்ப்பை காட்டி வந்தனர்
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரியை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் வாக்கு பொய்யா எம்மை ஏமாற்றி விட்டார் இலஞ்சம் வாங்கி எம்மை அளிக்காதே தடை செய் தடை செய் சட்டவிரோத தொழிலை முற்றாக தடை செய் கடற்றொழில் அமைச்சரே தங்களது வாக்குறுதி இதுதானா சுருக்குவலை அனுமதி முல்லை மீனவர்கள் பட்டிநிக்கான அனுமதி உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு ஊர்வலமாக சென்ற மீகவர்கள் சட்டவரோத கடற்தொழிலை தடை செய்யக்கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் கடுமையாக மக்கள் விமர்சித்தனர்
குறித்த இடத்தில் அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மீன்பிடி அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கான மகஜர்களை கையளித்திருந்தனர்
மகஜரை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா குறித்த மீனவ பிரதிநிதிகளை நாளை நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மீனவ அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவந்து இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்
அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சந்தித்து கலந்துரையாடினர்.பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்
இதன்போது மகஜரினை பெற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மகஜரினை உரிய அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழிலை தடைசெய்யக்கோரி கடந்த மாதம் 2ஆம் திகதி மீனவர்களினால் மிகப்பெரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக பத்து நாட்கள் போராட்டத்தின் பின்னர்
போராட்டக்காரரை சந்தித்த மீன்பிடி அமைச்சர் சட்டவிரோத கடற்தொழிலுக்கு முற்றாக தடைவிதித்ததுள்ளதாகவும் .சுருக்கு வலை கடற்தொழில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்கான அனுமதி (நீரியல் வளதினைக்களம்) மீண்டும் வழங்கப்பட்டடுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தொரிவித்தே இந்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது