தம்புள்ளையில் விற்பனை நிலையமொன்றில் சுற்றிவளைப்பிற்கு சென்ற 5 பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த நபர்கள் மிளகாய் தூள் தாக்குதலை பொலிஸார்மீது மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது மோசமான ஆயுதங்களில் மிளகாய் தூளும் ஒன்றாக மாறிவிட்டது.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போதும், உறுப்பினர்களுக்கு இடையில் மிளகாய் தூள் தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், பாதுகாப்பிற்காக வந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தம்புள்ளையில் மீண்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.