முல்லைத்தீவு கேப்பாபுலவு படைமுகாம் வாயிலுக்கு முன்னால் மக்கள் சுதந்திர நாளை கறுப்பு பட்டி நாளாக அறிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது பல பாகங்களில் இருந்தும் பல்கலை மாணவர்கள் பொது அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு இருந்தார்கள்.
இன்னிலையில் வீதியில் போராட்டத்திற்கு வருபவர்களையும் படைமுகாம் வாயிலுக்கு முன்னால் நின்று படம் எடுக்கும் ஊடகர்கள் மற்றும் முகநூல் நண்பர்களையும்,
சுழன்று சுழன்று படம் எடுக்கும் நடவடிக்கையில் படையிரின் சி.சி.ரிகேமரா ஈடுபட்டுள்ளதை அவதானிக்கமுடிந்துள்ளது.
படையினரின் படைமுகாம் வாயில் முன்பக்கம் 360 பாகையும் சுழலக்கூடியவகையில் அதிநவீன சி.சி.ரி கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாக அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தினையும் ஒளிப்பதிவு செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் , படைபுலனாய்வாளர்களும் கையடக்க தொலைபேசிகளில் போராட்ட காரர்களை இலக்குவைத்து ஒளிப்பதிவு செய்ததை அவதானிக்க முடிந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.