இன்போசிஸ் மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகும் நிலையில், ரயில் நிலையத்துக்கு அருகே கிடைத்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் மங்கலான விடியோக்களும், புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது. ஆனால், அதனைக் கொண்டு சந்தேக நபரை அடையாளம் காண்பது சிக்கலாக இருந்தது.
இந்த நிலையில், தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியோடு, அந்த புகைப்படம் தெளிவாக்கப்பட்டு, சந்தேக நபரின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை இரவு, சென்னை காவல்துறை தெற்கு மாவட்ட இணை ஆணையர் டி.எஸ். அன்பு, தி. நகர் உதவி ஆணையர் எஸ். சரவணன் ஆகியோர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகரக் காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் ரயில் நிலையத்துக்கு வந்து விசாரணையை மேற்பார்வை செய்தார்.
அப்போது, விசாரணையின் நிலை குறித்து செய்தியாளர்களிடம் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.