ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ,கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய அமையத்தின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இந்த அறிக்கை, முழுக்க, முழுக்க, இலங்கைக்கு ஆதரவாகவே உள்ளது. இதனை தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.