சென்னையில் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் – மின்துறை அமைச்சர்

சென்னையில் தடையில்லா மின்சாரம் வழங்க 68 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் அசோக், வேளச்சேரி – தரமணியில் புதிதாக 33 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியது: சென்னை நகரில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க ஒட்டு மொத்தமாக தற்போது 41 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதில் 4 துணை மின் நிலையங்களுக்கான பணிகள் முடிந்துள்ளன. இது தவிர, விரிவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின் கீழ் மேலும் 27 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 3 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் அமைக்கப்பட வேண்டிய 68 துணை மின் நிலையங்களில் 7 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பருக்குள் 24 துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு பெறும். அனைத்து துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்ட பின், சென்னை நகரில் மின்சாரம் தொடர்பான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்றார் அவர்.

68 துணைஅமைக்கப்பட்டுஅமைச்சர்கூறினார்.சென்னையில்தடையில்லாதுறைநத்தம்நிலையங்கள்மின்மின்சாரத்மின்சாரம்வருவதாகவழங்கவிஸ்வநாதன்
Comments (0)
Add Comment