சென்னை அயனாவரத்தில் வாய் பேசமுடியாத, காது கேளாத ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு ஏழு மாதத்தில் 17 பேர் தொடர் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாய் பேச முடியாத, காது கேளாத குறித்த 11 வயது சிறுமி 17 பேரால் கடந்த ஏழு மாதங்களாக மயக்க ஊசி, மற்றும் போதை ஊசி போட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பாதக செயலை செய்த 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிர்வரும்- 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளிகளை புழல் சிறைக்குக் கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முயற்சித்தபோது நீதிமன்ற வளாகத்திலிருந்த வழக்கறிஞர்கள் அந்த மனித மிருகங்களை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
குற்றவாளிகளை சிறைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் பொலிஸார் தவித்த நிலையில் மேலதிக பொலிஸார் வரவழக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.