சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 22ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.  

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் இதனைத் தெரிவித்தார். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பாக நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்து புதிய ஆட்சி அமைந்து கடன் குறித்து கொள்கை முடிவை அறிவிக்கும் வரை, வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று, பாதிக்கப்பட்ட விவசாயிகள், அது குறித்த மனுவினை, ரிசர்வ் வங்கி மேலாளரிடம் நேரில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாண்டியன் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டம்ஒருங்கிணைப்புகண்டனம்கோரிக்கைசங்கம்சென்னைவலியுறுத்தல்விவசாயி
Comments (0)
Add Comment