சென்னையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 105 டிகிரி கடும் வெயில்!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சென்னை, கடலூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு அதிகளவில் இருக்கிறது.

சென்னை, புதுச்சேரியில் 105 டிகிரி வெயிலை தொட்டது.  ஜூலை மாதத்தில் நூறு வருடங்களுக்குப் பின் 105 டிகிரி வெயில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென் கடலோர மாவட்டங்கள் தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் இரண்டு முதல் மூன்று டிகிரி கூடுதலாக வெயில் பதிவாகும் என்றும், சென்னை மாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும், 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கடலூர், மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது.

கடலோர மாவட்டங்கள்சென்னைநூறு வருடங்கள்பருவமழைவானிலை ஆய்வு மையம்வெப்பநிலைவெயில்
Comments (0)
Add Comment