சென்னை ஐ.ஐ.டி மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடையில்லை : டீன் சிவகுமார் ஸ்ரீனிவாசன் விளக்கம்

சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடையில்லை என்று அக்கல்வி நிறுவனத்தின் டீன் சிவகுமார் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சிவகுமார் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,

சென்னை ஐஐடியில் கருத்துச் சுதந்திரத்திற்கு தடையில்லை. ஆனால், தேர்வு செய்யப்பட்ட மாணவ பிரதிநிதிகள் அடங்கிய ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மாணவர் அமைப்புகள் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மாணவர் அமைப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர் அமைப்புக்கான அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தற்போதும் அந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி மாணவர்கள்கருத்துச் சுதந்திரம்சிவகுமார் ஸ்ரீனிவாசன்சென்னைடீன்மாணவர் அமைப்புக்கு தடைவிளக்கம்
Comments (0)
Add Comment