நேற்று சென்னை சரக்கு விமான பகுதியில் சரக்கு விமானம் ஒன்று அதிவேகமாக புறப்பட்டதால் எழுந்த காற்றின் விளைவாக ஓடு பாதையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி பெட்டிகள் பல 200அடி உயரத்தில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு விமானத்தில் ஏற்றுவதற்காக காலி தகர பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விமானம் எழுப்பிய காற்று காரணமாக அந்த பெட்டிகள் 200 அடி உயரத்திற்கு பறந்தன. நல்ல வேளையாக யாரும் ஓடு தளத்தில் இல்லை. விமானங்களும் அருகில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எத்தியோப்பியா விமானம் வேகமாக புறப்பட்டுச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.