இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடும் முயற்சிக்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அருகிலுள்ள கட்டடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் சுங்கத்துறை அலுவலகத்திலிருந்த ஏராளமான முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.