அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுராவுக்கு நவம்பர் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் மாலை 5.10 மணியளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு எர்ணாகுளத்தில் இருந்து ஹவுராவுக்கு நவம்பர் மாதம் 3, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எர்ணாகுளம் , ஹவுரா இடையேயான சிறப்பு ரயில் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை , காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 22ம் தேதி தொடங்குகிறது.