சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   சென்னையில் இருந்து பொங்கலை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கானவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுசஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் வரை நேற்று மாலை முதல் அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்னை நோக்கி வந்தன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.

கடும்சென்னைதிருச்சிதேசிய நெடுஞ்சாலைநெரிசல்போக்குவரத்து
Comments (0)
Add Comment