சென்னை, திருவள்ளூர் உட்பட 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.       இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி‌யராக இருந்த வீரராகவராவ், மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

இதே போல், மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வருவாய் நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் சென்னை மாவட்டத்திற்கும், கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி திருப்பூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேஷ், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் ஊரக மேம்பா‌டு பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநர் நடராஜன் ராமநாதபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த விக்ரம் கபூர் சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.‌ சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநராக இருந்த சந்திர மோகன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9 மாவட்டஆட்சியர்கள்சென்னைதமிழகத்தில்திருவள்ளூர்மாற்றம்
Comments (0)
Add Comment