சென்னை நுங்கம் பாக்கத்தில் முத்துக்குமாரனுக்கு அஞ்சலி

ஈழத்தமிழர்களின் உயிரை காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2009–ம் ஆண்டு ஜனவரி 29–ந் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் வளாகத்தில் முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

7–ம் ஆண்டு நினைவுநாளான நேற்று சாஸ்திரிபவன் முன்பு தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் முத்துக்குமாரின் உருவம் பொறித்த முகமூடியை அணிந்தப்படி அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெண்கள் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அஞ்சலி செலுத்த வந்த பெண்களில் சிலர் சாஸ்திரிபவன் அலுவலகத்தின் மூடப்பட்டிருந்த நுழைவுவாயில் பகுதியில் முத்துக்குமாரின் படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றினர்.

பின்னர், பெண்களை தவிர, 25 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து தமிழர் எழுச்சி இயக்க சென்னை மாவட்ட செயலாளர் ப.கண்ணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் ஆடோசு சாலையின் பெயரை, ஈழத்தமிழர்களின் உயிரை காக்க தன்னுயிர் நீத்த முத்துக்குமாரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். முத்துக்குமாரின் நினைவை நிறைவேற்றும் வகையில் சிங்கள அரசுடனான உறவை மத்திய அரசு துண்டிக்க வேண்டும்’ என்றார்.

அஞ்சலிஅரசுஇந்தியஈழத்தமிர்கள்உயிர்காக்கதீகுளிப்புநாள்நினைவுமுத்துக்குமார்
Comments (0)
Add Comment