சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆஜராகிறார்

முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆஜராகிறார்.

ஆனந்த விகடன் பத்திரிகையின் கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார். இதையடுத்து, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உத்தரவுப்படி, வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தில் கருணாநிதி இன்று ஆஜராகிறார்.

வழக்கை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே இருப்பதால், நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பானவர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவதூறுஆஜராகிறார்கருணாநிதிசென்னைஜெயலலிதாதலைவர்திமுகநீதிமன்றத்தில்மாவட்டமுதன்மைமுதலமைச்சர்வழக்குவிசாரணை
Comments (0)
Add Comment