சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க பயணிகள் கோரிக்கை

சென்னையின் புதிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மக்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக ஆலந்தூர் – கோயம்பேடு இடையே பத்து கிலோ மீட்டர் தூரம் வரையில் செல்லும் சேவை தொடங்கப்பட்டது.

 இருவழித்தடத்திலும் ப்ரீத்தி, ஜெயஸ்ரீ ஆகிய இரு பெண்கள் மெட்ரோ ரயிலை இயக்கினர். மெட்ரோ ரயில் 72 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்றபோதிலும், 35 கிலோ மீட்டர் வேகத்தில் தான் தற்போது இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக பத்து ரூபாயும், அதிகபட்சமாக நாற்பது ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனைக் குறைக்க வேண்டும் பயணிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புறப்பட்ட மெட்ரோ ரயில் ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் வழியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் வழியாக 19 நிமிடங்களில் கோயம்பேடு ரயில் நிலையத்தைவந்தடைந்தது. இதில் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர்.  அப்போது பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவையை வரவேற்றுள்ள தமிழக அரசியல் தலைவர்கள், அதன் கட்டணத்தை குறைத்தால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள் என கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் தலைவர்கள்ஆலந்தூர்கட்டணம்கோயம்பேடுகோரிக்கைசென்னைபயணிகள்மெட்ரோ ரயில்
Comments (0)
Add Comment