சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பற்றிய தீ அருகில் உள்ள பொம்மை தொழிற்சாலைக்கு தீ பரவியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் 5 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தை தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றும், எனினும் இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.