செம்மர தொழிலாளர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் – ஆந்திர டிஜஜி

செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து வரப்படும் தொழிலாளர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆந்திர டிஐஜி காந்தாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டுவதற்காக வந்த 6 பேரை அம்மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர டிஐஜி காந்தாராவ்,  தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த கூலிகளை, செம்மரங்களை வெட்டுவதற்காக  ஏஜென்டுகள் அழைத்துவருவதாக கூறினார்.

மலைவாழ் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்கள் செம்மரங்கள் வெட்ட அழைத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில், தமிழக அரசு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் மக்கள் நல வாரியத்தினர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே 300 ரூபாய் கூலிக்காகவே தாங்கள் அழைத்துவரப்பட்டதாக கைதான தமிழக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுஆந்திராகாந்தாராவ்செம்மரம்டிஐஜிதடுப்புதமிழகம்தொழிலாளர்கள்வெட்டுதல்வேண்டுகோள்
Comments (0)
Add Comment