ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகிந்தவை , பதவிநீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை, அரசமைப்புக்கு முரணாக அரசமைப்பை மீறி நியமித்துள்ளதாகவும், இது சட்டவிரோதமானது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பு, ச ட்டம் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் காரியங்கள் இடம்பெறவேண்டும் என்பதே எமது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனடிப்படையிலேயே, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்ட விடயத்தில் நாம், மூன்றாவது தடவையாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.