ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது – ஜனாதிபதி

எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதோடு தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் தற்பொழுது ஈடுபட்டிருப்பதாகவும்ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமைகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த செவ்வியில் ஜனாதிபதி கருத்துக்களைப் பரிமாறியிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி
Comments (0)
Add Comment